சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை நடிகர் பார்த்திபன் இன்று மாலை நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுமக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் காவல் அருங்காட்சியகம் காவல்துறை நம் நண்பன், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு  சுதந்திரத்திற்கு காவல் துறையினர்  உதவியாக இருந்தவர்கள். காவல் துறைக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும், சாலையில் செல்லும்போது மது அருந்துவது,விதிகளை மீறி செல்லும்போது காவல் துறையிடம் வாக்குவாதம் செய்து அதை வீடியோவாக எடுப்பது இப்போது அதிகம் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வடசென்னையில் ஒரு புதுப்பேட்டை ஸ்டைல் - மாப்பிள்ளையை தட்டிவிட்டு பெண்ணுக்கு காதலன் தாலிக்கட்ட முயற்சி


காவல் துறைக்கு நாம் ஒத்துழைக்கும் போது நமக்கான சுதந்திரம் நமக்கான சந்தோசம் கிடைக்கும். சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்திருந்தாலும் 10 குழந்தைகள் சிக்னலில் பிச்சை எடுப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது.


பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது என் கோரிக்கை.


மேலும் படிக்க | மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள் - கிரிக்கெட்டுக்காக திருமணத்தில் கூத்து!


பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சாம்பாரில் இருக்கும் வெங்காயம் போன்று இருக்கும். சாம்பாரில் உள்ள வெங்காயம் சுவையானது அந்த அளவுக்கு என்னுடைய கேரக்டரும் படத்துக்கு உதவியாக இருக்கும். அடுத்தபடியாக திருடர்களை வைத்து படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன் இதயத்தை திருடுபவனாக இருக்கும்” என்றார்.


மேலும் படிக்க | நவீன பாசமலர்கள்! மரணத்திலும் இணை பிரியாத சகோதரிகளின் பாசப் பிணைப்பு


மேலும் படிக்க | பாதத்தில் விழுந்து.. பதவியை வாங்கிய பச்சோந்தி யார்..' - கவிதை எழுதி இபிஎஸ்-ஐ கழுவி ஊற்றிய அழகுராஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ