சென்னை: 'நமது அம்மா' நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து 'யார் பச்சோந்தி' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடிக்க தொடங்கிய பின்னர், ஏறத்தாழ 70 நாள்களுக்கு பிறகு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஓ.பன்னீர் செல்வத்தை பச்சோந்தி என விமர்சித்தார்.
செய்தியாளர்களிடம் மத்தியில் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவுக்கும் விஸ்வாசமாக இல்லை, ஜெயலலிதாவுக்கும் விஸ்வாசமாக இல்லை என குற்றஞ்சாட்டிய அவர், மன்னிப்பு கேட்டாலும் கூட ஓபிஎஸ்-ஐ கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்தை விமர்சிக்கும் வகையில், மருதுராஜ் அழகுராஜ் ஒன்றை எழுதியுள்ளார்.
நிறம் மாறும் பச்சோந்தி யார்...
யார் பச்சோந்தி என்ற தலைப்பில், 'பாதத்தில் விழுந்து பதவியை வாங்கிவிட்டு, பதவி தந்தவரையே நாய் என்று விமர்சித்த பச்சோந்தி யார்' என குறிப்பிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கு, அப்போது அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் உதவினார் என்று கூறப்பட்டது. தொடர்ந்து, சில மாதங்களிலேயே சசிகலா சிறை சென்றவுடன், ஓபிஎஸ் உடன் கைக்கோர்த்து டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மருது அழகுராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'ஆர்.கே.நகர்
தேர்தல் வரை, தினகரனுக்கு தொப்பி போட்டு, பிரச்சாரம்
செய்து விட்டு..., அவருக்கும்
கட்சிக்கும் என்ன சம்பந்தம்
என்று, நீட்டி முழங்கி
நிறம் மாறிய பச்சோந்தி
யார்...' எனக் குறிப்பிட்டுள்ளார்.
'அம்மாவையே நீக்கிய அயோக்கிய பச்சோந்தி'
தொடர்ந்து, சேலத்தில் ஒற்றைத் தலைமை என்பது கற்பனை என இபிஎஸ் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள அழகுராஜ், சென்னை வருவதற்குள் ஏன் தனது கருத்தை மாற்றினார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
2017இல், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்ட போது, நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் அந்த பதவியை ரத்து செய்துவிட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்வுசெய்யப்பட்டார்.
மேலும் படிக்க: திமுகவுடனான உறவை ஓபிஎஸ் பகிரங்கப்படுத்திவிட்டார்: இபிஎஸ் குற்றச்சாட்டு
இதுகுறித்து மருது அழகுராஜ் தனது கவிதையில்,
'அம்மாவுக்கே நிரந்தர பொதுச் செயலாளர் இருக்கை என,
யோக்கினாக பேசிவிட்டு,
வார்த்தை ஈரம் காய்வதற்குள்,
அம்மாவின் பதவியை ஆக்கிரமிப்பு செய்திட,
அம்மாவையே நீக்கிய அயோக்கிய பச்சோந்தி யார்...' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,'இப்படி..., தரைநக்கி பிழைப்பதும்,
தன்னலமே இலக்கு என, செய் நன்றிமறப்பதும்,
குத்துக் கொல் பழனிக்குத் தான்,
ரத்தத்தில் ஊறிய பழக்கம்...' எனவும் தெரிவித்துள்ளார்.
யார் யார் காலில் எல்லாம்..
எடப்பாடி பழனிசாமி, ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என தவறுதலாக கூறியதை, 'கம்பன் எழுதி இராமாயணத்தையே,
சேக்கிழார் எழுதியதாக,
அரசு விழாவிலேயே அடிச்சுவிட்டு...' என எழுதியுள்ளார்.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிச்சாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார் - புகழேந்தி தாக்கு
'கலர் மாற்றும் காரியத்தில், பச்சோந்தியையே, முச்சந்தியில் நிலைகுத்தி நிற்க வைத்த, கூவத்தூர் கோமாளி தான், தொண்டர்களின் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க வேண்டும்...' என குறிப்பிட்டுள்ள மருது அழகுராஜ், குறிப்பாக, செங்கோட்டையன், சேலம் கண்ணன், முத்துசாமி ஆகியோர் தொடங்கி சசிகலா, தினகரன், ஓபிஎஸ் வரை என எழுதியுள்ளார்.
மேலும், கடைசி வரியில் 'புரியுதா...' என குறிப்பிட்டு மேற்கூறியவர்களின் காலிலும் விழ வேண்டும் என தொனியில் எழுதியுள்ளார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக மருது அழகுராஜ் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி,'"நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் "நமது அம்மா நாளிதழ்" ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்' என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ