சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி  வளாகத்தில்  சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஐடி வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 19,20,21 ஆகிய தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 700 பேருக்கு நேற்று வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 



அவர்களுக்கு  அங்கேயே தனிமைப்படுத்திக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். ஐஐடி விடுதி மூலம் தொற்று பரவியுள்ளது. மேலும் ஐஐடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், வெப்பமானி மூலம் தொடர் பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி


அக்கறையுடன் மக்கள்  முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்” என்றார்.



முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதத்திலிருந்துதான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவசத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என கூறியிருந்தார்.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் சுப்பிரமணியன்


அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என நேற்று அமைச்சர் கூறியிருந்த சூழலில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என இன்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR