கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே, மத்திகிரியில் உள்ள சுடுகாட்டில், சூதாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக (Tamil Nadu) மற்றும் கர்நாடகா (Karnataka) மாநில எல்லையில் செயல்பட்ட சூதாட்ட இடங்களை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தனர்.  இதனை தொடர்ந்து, தீபாவளி மற்றும் பிற  பண்டிகை காலங்களில், மிக பெரிய அளவில் இந்த பகுதிகளில் சூதாட்டம் நடப்பது வழக்கம் என்பதால் மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.


ALSO READ | மருத்துவமனையில் இருந்து 8 மாத கர்ப்பிணி மாயம் கடத்தப்பட்டாரா? தீவிர விசாரணை!


இதை அறிந்த நபர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் சுடுகாடு போன்ற இடங்களை தேர்வு செய்து சூதாட்டத்தில் (Gambling) ஈடுப்பட்டனர். மத்திகிரி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ராயல் டவுன் என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டில் சூதாடிகள் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


இந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 12 நபர்களை கைது செய்தனர். ஒசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் மத்திகிரியை சேர்ந்த இவர்களிடம் இருந்து ரூபாய் 12,260 ரொக்க பணம் மற்றும் 9 இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


ALSO READ |  'டிக்டாக்' சுகந்தி கைது! பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR