திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்திருந்த நிலையில் திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவோடு இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. திருமங்கலம் மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் கருப்புக் கொடிகட்டி சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நகர்புற எல்லையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால்., விதிமுறைக்குகு புறம்பாக 2 கிலோமீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடியை வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


போராட்டம் நடத்தும்போது கட்டண விலக்கு அளிப்பதும்., பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுமாக சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்த நிலையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் முதல் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்ததால் கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து அனைத்து கடைகளிலும் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைக்கப்பட்டது. 


தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் விதிமுறைக்கு புறம்பாக உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு தலைமையில் திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவுடன் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் அனைத்து வியாபாரிகள் சங்கம், மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கம் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் படிக்க | கரெக்ட் ரூட்டில் செல்லும் கதிர் ஆனந்த்..! வேலூரில் மகுடம் சூடுவாரா? கள நிலவரம்!


அதனை நிறைவேற்றும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளும் இயக்கப்படவில்லை. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. 


போராட்டக் குழுவினர் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளிடம் தெரிவித்த சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் மட்டுமல்லாது வருகிற பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு - உதயநிதி ஸ்டாலின்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ