அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி: விஜயகாந்த் வேதனை
அறிவிக்கப்படாத மின்வெட்டால் தமிழக மக்கள் அவதி அடைந்து வருவதாக தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் தமிழக மக்கள் அவதி அடைந்து வருவதாக தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி ஆகியோர் மின் தடை குறித்து கேள்விகள் எழுப்பினர். காங்கிரஸ் உறுப்பினர் செல்வப் பெருந்தகை, எல்லாத் துறைகளிலும் எப்படி இந்த அரசு சிறப்பாகச் செயல்படுகிறதோ, அதே போல மின்சாரத் துறையும் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 18-ம் தேதி 312 மில்லியன் யூனிட் நுகர்வு 21-ம் தேதி 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் வரவில்லை என்று தெரிவித்தார். இதனால் மின்தடை ஏற்பட்டதாகவும், 3 ஆயிரம் மெகாவாட் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மேலும், தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்தடை ஏற்பட்டதாக கூறிய அவர், இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின்தடை சரிசெய்யப்பட்டதாகவும், இதற்கு முன்பு மின்தடை ஏற்படாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி செய்கிறார், ஆனால், கடந்த ஆண்டுகளில் 68 முறை மின்தடை ஏற்ப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி அவர்,திமுக ஆட்சியில் ஒரு முறை மட்டுமே ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு-மத்திய அரசிடம் வலியுறுத்தும் தமிழக அரசு
இந்நிலையில் மின்வெட்டு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர், காரைக்குடி, கரூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கோவை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறிவரும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது மத்திய தொகுப்பில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் திடீரென தடைப்பட்டதால் மின் வெட்டு ஏற்பட்டதாகத் தெரிவித்திருப்பது பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு பிரச்சினை ஏற்படும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது. அந்தக் கருத்தைப் பொய்யாக்கும் வகையில், மின் மிகை மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெயில் சுட்டெரித்து வரும் கோடைக் காலத்தில், இதுபோன்ற மின்வெட்டு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு சீரான மின்சாரத்தை வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்'' என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR