பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் கரிகாலன்(45), விவசாயியான இவர் ஆலம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜோசியரான சோலைராஜா(73) என்ற முதியவர் நீரோட்டம் பார்ப்பதற்காக ஆலம்பாடி கிராமத்திற்கு வந்தவர் மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது கரிகாலன்  வந்த இருசக்கர வாகனத்தில் 
லிப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது,பெரம்பலூரில் இருந்து மேலப்புலியூர் நோக்கி அதி வேகமாக சென்ற மினி பஸ் கரிகாலனும், முதியவர் சோலைராஜாவும் வந்த டூவீலர் மீது அதிவேகமாக மோதியது.


மேலும் படிக்க | காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் BJPக்கும் என்ன தொடர்பு? அண்ணாமலை விளக்கம்


இந்த திடீர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கரிகாலனும், சோலைராஜாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இதுகுறித்து தகவலறிந்த கரிகாலனின் உறவினர்கள் உள்ளிட்ட ஆலம்பாடி பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு விபத்துக்கு காரணமான மினி பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர் இதனால் அங்கு பதட்டமும், பரபப்பும் நிலவியது.


இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயியும் அவரிடம் லிப்ட் கேட்டு வந்த ஜோசியரும் மினி பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் இருவரது குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க | இது சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது: கோவையில் துரை வைகோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ