கிசான் யோஜனா மூலம் இந்த Bumper பலன்களைப் பெறலாம், எப்படி?

PM Kisan: தவணை தவிர, PM Kisan Yojana விவசாயிகள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 29, 2021, 11:38 AM IST
கிசான் யோஜனா மூலம் இந்த Bumper பலன்களைப் பெறலாம், எப்படி? title=

புதுடெல்லி: PM Kisan Yojana: மத்திய அரசின் மிக லட்சிய திட்டமான ‘PM Kisan Samman Nidhi Yojana’ திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் கணக்கில், 2,000 ரூபாய் வீதம், 3 தவணைகளாக, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதியுதவியை, அரசு வழங்குகிறது. இதுவரை அதன் 9 தவணைகளாக அதாவது 18,000 ரூபாய் விவசாயிகளின் கணக்கில் சென்றுள்ளது.

கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பல நன்மைகள் கிடைக்கும்
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ், தற்போது அரசாங்கம் விவசாயிகளுக்கு பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் 3 தவணைகளைத் தவிர, தற்போது  விவசாயிகள் மன்தன் யோஜனாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகளின் நிதி உதவிக்காகவும், முதியோர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் 'பிஎம் கிசான் மந்தன் யோஜனா' (pm kisan mandhan pension scheme) என்ற ஓய்வூதிய வசதியையும் அரசு தொடங்கியுள்ளது.

ALSO READ | PM Kisan: விவசாயிகளுக்கு நல்ல செய்தி, இந்த திட்டத்தில் உறுதியான ஓய்வூதியம் நிச்சயம்

இதனுடன், விவசாயிகள் கிரெடிட் கார்டு மூலம் கடனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒரு பிரத்யேக விவசாயி ஐடியை (Unique Farmer ID) உருவாக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

1. கிசான் கிரெடிட் கார்டு (KCC kisan credit card)
மத்திய அரசு தனது மிகவும் லட்சிய திட்டமான PM Kisan Yojana திட்டத்தின் 9வது தவணையை வெளியிட்டுள்ளது. நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் (KCC kisan credit card) பலனைப் பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நிதி உதவி மட்டுமின்றி, மலிவு விலையில் கடனுதவியும் அரசு வழங்குகிறது.

உண்மையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா மற்றும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் ஆகியவை சுய-சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில், அரசு விவசாயிகளுக்கு மலிவு விலையில் கடன் வழங்குகிறது.

2. PM கிசான் மந்தன் யோஜனா
பிரதம மந்திரி கிசானின் கீழ், மந்தன் யோஜனா (pm kisan mandhan pension scheme) விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வசதியும் உள்ளது. நீங்கள் PM Kisan இல் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை. உங்கள் நேரடிப் பதிவு பிரதமர் கிசான் மன்தன் திட்டத்திலும் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பலன்களை இங்கே காண்போம்.

பிரதம மந்திரி கிசான் மந்தன் திட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, 60 வயதிற்குப் பிறகு இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த விவசாயியும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன்படி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.3000 கிடைக்கிறது.

3. கிசான் கார்டு தயாரித்தல்
பிரதமர் கிசான் திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தனித்துவமான (Unique farmer ID) விவசாயி அடையாள அட்டையை உருவாக்க மத்திய மோடி அரசு தயாராகி வருகிறது. இந்த சிறப்பு அடையாள அட்டையை பிஎம் கிசான் மற்றும் மாநிலங்கள் சார்பாக நில பதிவு தரவுத்தளத்துடன் இணைத்து தயாரிக்கும் திட்டம் உள்ளது. இந்த அட்டை உருவாக்கப்பட்ட பிறகு, விவசாயம் தொடர்பான திட்டங்கள் விவசாயிகளை எளிதில் சென்றடையும்.

ALSO READ | PM கிசான்: ரூ .4000 பெற கடைசி வாய்ப்பு; முழு விவரம் இங்கே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News