Petrol Price Today 03 June 2021: நாட்டில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் விலை ரூ .100 ஐ தாண்டியுள்ளது. இப்போது டீசலும் சில நாட்களில் ரூ .100 என்ற உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விலை உயர்வு குறைவதாகத் தெரியவில்லை. இதனால் சாமானிய மக்கள் பெரும் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 95.99 ரூபாயாகவும் டீசல் 90.12 ரூபாயாகவும் உள்ளது.


எண்ணெய் விலையில் அரசாங்கம் தலையிடாது: ஆதாரங்கள்


தற்போது அதிகரித்து வரும் எண்ணெய் விலையில் அரசாங்கத்துக்கு தலையிடும் எண்ணம் இல்லை என்று ஜீ நியூஸுக்கு பிரத்யேக செய்தி கிடைத்துள்ளது. மாறாக, பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் விலையில் படிப்படியாக அதிகரிப்பு செய்யப்படும் என்று அரசு வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது விலை 10-10 பைசாவாக அதிகரிக்கும். விலைகளில் திடீர் அதிகரிப்பு இருக்காது. அதாவது, ஒரே வேளையில் மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்காமல், சிறிது சிறிதாக அரசு விலை உயர்வை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. விலை தொடர்ந்து இப்படி அதிகரித்தால், 15-20 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ .2-ரூ.3 அதிகரிக்கும், டீசல் விலையும் ரூ .1-ரூ.2 அதிகரிக்கும்.


அரசாங்கத்தால் ஏன் எதுவும் செய்ய முடியாது?


பெட்ரோல் மற்றும் டீசல் (Diesel) விலைகள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது, இந்த விலைகளின் கட்டுப்பாடு அரசாங்கத்திடம் இல்லை. அதிகபட்சமாக, அரசாங்கம் அதன் வரியைக் குறைத்து சிறிய நிவாரணத்தை அளிக்க முடியும். ஆனால் அரசாங்கம் இப்போது தலையிட விரும்பவில்லை. தற்போது, ​​கச்சா எண்ணெயும் ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கு அப்பால் உள்ளது. இது ஒரு ஆண்டில் அதிகபட்ச விலையாகும். 


ALSO READ: மின்சார வாகங்களுக்கான மிகப் பெரிய செய்தி: ஊக்கமளிக்கும் உத்வேகத்தில் மத்திய அரசு


இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் உள்ள அரசு எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்கும். தற்போது, ​​எண்ணெய் நிறுவனங்கள் சராசரியாக ஒரு லிட்டருக்கு 20 பைசா முதல் 40 பைசா வரை அதிகரிக்கின்றன. ஆனால் இப்போது ஒரே முறையில் இவ்வளவு பெரிய அதிகரிப்புகள் இருக்காது. 


பெட்ரோலிய அமைச்சகத்தின் கவலை அதிகரித்தது


ஆதாரங்களின்படி, கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பெட்ரோலிய அமைச்சகமும் கவலை கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் 10 நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளது. 


மறுபுறம், மத்திய அரசு (Central Government) தலையிடவில்லை என்றால்,  மாநிலங்களும் தங்கள் வரியைக் குறைக்கத் தயாராக இல்லை. இது வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையாக உள்ளது. கொரோனா காலத்தில் மாநிலங்களின் வருவாய் கணிசமாகக் குறைந்துவிட்டதால், வரியை குறைப்பது தங்கள் கையில் இல்லை என்பது மாநிலங்களின் நிலைப்பாடாக உள்ளது.


ALSO READ: Petrol Price Today : உங்கள் ஊரில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!!



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR