கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மண்டல பி.எப். அமலாக்கப்பிரிவு அதிகாரி மைதிலி தேவி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் தொழிலாளர்களின் பணம் கையாடல் நடைபெற்றுள்ளதாகக் கோவை பந்தய சாலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


புகாரில் கோவை பி.எப். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிவரும் அந்தோணி குருதி என்பவர் கோவையில் உள்ள 2 தனியார் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணியாற்றும் 28 ஊழியர்களின் பி.எப். பணத்தை வேறு சிலரின் வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றி உள்ளது தெரியவந்தது. இதனால் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எப். பணத்தை கையாடல் செய்து மோசடி செய்த அந்தோணி குருதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | “கறந்த பாலை கறந்த படி மக்களுக்கு விநியோகம் செய்யும் ஒரே நிறுவனம் ஆவின்” - யார் சொன்னது ?


இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் அந்தோணி குருதி மீது இந்திய தண்டனைச் சட்டம் 406,465 மற்றும் 468 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தேடுவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அந்தோணி குருதி தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் படிக்க | தமிழகத்தில் ஆவிகளுக்கு விருந்து படைக்கும் மலைவாழ் மக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR