தமிழகத்தில் பொறியியல் சான்றிதழ்களை சரிபார்க்க ப்ரத்தியேக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், ‘பொறியியல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குறித்து 044-22351014, 223510125 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பில் சந்தேகம் இருக்கும்பட்சத்தில் சென்னை அலுவலகத்தை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். 


தமிழகத்தில் 46 மையங்களில் பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன’ எனவும் தெரிவித்துளார்.


தொடர்ந்து பேசிய அவர் ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப்போல் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள். அதிமுக-வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து ஆகும். 


எந்தவித தொய்வுமின்றி அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்கின்றன’ என்று  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பெருமிதம் தெரிவித்தார்.


தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு 48 மையங்கள் அமைக்கப்பட்டு நேற்றுமுதல் சரிபார்ப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 23000 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.


இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 1,33,116 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று (ஜூன் 7) துங்கி 12-ஆம் தேதி வரை என 6 நாட்கள் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நாள், நேரம் குறித்து அனைத்து மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக அறிவிக்கப்பட்ட படி நேற்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கியது.