தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுப்படுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக இருப்பதாக டெல்லி உள்பட பல மாநில அரசுகள் தெரிவித்த நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வுகள் நடைபெற்றது. ‘பிளாஸ்மா’ சிகிச்சைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்ட நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் குணமடைந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில்,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை, மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று தொடங்கி வைத்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.அப்போது அவர் கூறியதாவது, கொரோனாவில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது.  கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்கலாம். 


ALSO READ | Job Alert: கொரோனா காலத்திலும் வேலைவாய்ப்பின் களஞ்சியமாக விளங்கும் அரசின் வலைதளம்!!


பிளாஸ்மா தானம் அளிக்க தகுதி உள்ளவர்கள் தானம் அளிக்க முன் வர வேண்டும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முடியாதுசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 26 பேருக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.