தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவர்கள் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 5,380 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிவியல் பாடப்பிரிவில் 5.47 மாணவர்களும், வணிகவியல் பாடப்பிரிவில் 2.42 லட்சம் மாணவர்களும், கலைப்பிரிவில் 14 ஆயிரம் மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 60 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுதுகிறார்கள்.


புச்சேரியில் 38 தேர்வு மையங்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 2794 தேர்வு மையங்களில் 6903 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 407 பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27190 மாணவர்கள், 25337 மாணவிகள் என மொத்தம் 47127 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். ஏப்ரல் 5ம் தேதி முடிவடையும் ப்ளஸ் 2 தேர்வுகளின் ரிசல்ட் மே 16ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் கைப்பேசி எடுத்துவர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.