சென்னை: பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் (PMKSNY) முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் கே.பழனிசாமி (K Palanisamy) தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்களன்று திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் சிலர் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறினார். அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களிடம் இருந்து தொகை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.


பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் இரண்டு ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவான நிலம் கொண்ட சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.


தமிழகத்தின் (Tamil Nadu) சில மாவட்டங்களில் இதற்கு தகுதியற்ற நபர்கள் தவறான தகவல்களுடன் இந்த நிதி உதவியைப் பெற்றுள்ளனர்.


இந்த வழக்கை குற்றப்பிரிவு-குற்ற புலனாய்வுத் துறை (CB-CID) விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த மோசடி முதலில் கடலூர் மாவட்டத்தில் (Cuddalore District) வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகு அங்கு விசாரணைக்கு அங்குள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


ALSO READ: PMKSY மோசடி: கடலூரில் பல அதிகாரிகளிடம் CB-CID தீவிர விசாரணை!!


இந்த முறைகேடின் அளவு பல கோடி ரூபாயாக உள்ளது என்று குற்றம் சாட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மட்டும் சுமார் 10,700 போலி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


கடலூர் மாவட்டத்தில் போலி விவசாயிகளிடமிருந்து 4.20 கோடி ரூபாயும், விழுப்புரம் மாவட்டத்தில் 4.50 கோடி ரூபாயும் மீட்கப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களில் மோசடி புகார்கள் எழுந்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.


பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திலும் மோசடி நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். அதில் போலி கணக்குகளை காண்பித்து பெரும் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


மாநிலத்தில் ஆளும் அதிமுகவை ஆதரித்ததற்காக பாஜகவை கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இந்த மோசடிகள் குறித்து சிபிஐ விசாரணையைக் (CBI Probe) கோரினார்.


எனினும், பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து தீவிரமான விசாரணை நடந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தமிழக முதல்வர் உறுதியளித்தார். 


ALSO READ: PM Kisan விவசாயிகள் நலத்திட்ட ஊழலில் CBI விசாரணை தேவை: தமிழக விவசாயிகள்