உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
ஊராட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்க்ள இன்று பதவியேற்று கொள்ளும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை, பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தில், கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்), ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 12 ஆம் தேதி எண்ணப்பட்டன.
இதில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி வென்றது. சில இடங்களில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக கட்சி சார்பாக போட்டியிட்டவர்களில், 8 யூனியன் கவுன்சிலர், 41 பஞ்சாயத்து தலைவர்கள், 332 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று, நேற்று முன் தினம் நட்ந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். .
ஊராட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்க்ள இன்று பதவியேற்று கொள்ளும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை, பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கட்சியினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | திமுக கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது : ஒபிஎஸ்-இபிஎஸ் கண்டனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR