Watch: மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக தரிசனம்
நாளை மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில். கடைசி கட்டமாக அனல பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜகவின் தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள், தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாளை மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்துள்ளார்.
ALSO READ | திமுக 2G ஏவுகணையை பெண்கள் மீது வீச ஆரம்பித்துள்ளது: பிரதமர் மோடி
பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மதுரை வந்துள்ள பிரதமர் மோடி மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்ந்திருந்த, பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பாக, பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
முன்னதாக மேற்குவங்கத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி,, அங்கிருந்து கார் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் சென்றடைந்தார். பிரதமரின் வருகையை அடுத்து மதுரை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR