திமுக 2G ஏவுகணையை பெண்கள் மீது வீச ஆரம்பித்துள்ளது: பிரதமர் மோடி

தமிழக தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி  மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்குபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 30, 2021, 04:14 PM IST
  • திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை,தளபதி பொல்லான், காளிங்கராயர் போன்ற மாமனிதர்களை நாட்டுக்கு அர்பணித்தது தமிழகத்தின் கொங்கு மண்.
  • திமுகவுக்கும், காங்கிரஸிற்கும் பெண்களை இழிவுபடுத்துவதே நோக்கம்.
  • முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை சட்டமன்றத்துக்குள் திமுக தலைவர்கள் தாக்கியதை மறக்க முடியாது.
திமுக 2G ஏவுகணையை பெண்கள் மீது வீச ஆரம்பித்துள்ளது: பிரதமர் மோடி title=

தமிழக தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி  மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்குபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது. 

பிரச்சாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை,தளபதி பொல்லான், காளிங்கராயர் போன்ற மாமனிதர்களை நாட்டுக்கு அர்பணித்தது தமிழகத்தின் கொங்கு மண் என கூறினார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி  2ஜி ஏவுகணையை வீச பெண்கள் மீது வீசி, பெண்களை இழிவு படுத்த ஆரம்பித்துள்ளது. மரியாதைக்குரிய முதல்வரின் தாயாரை இழிவு செய்யும் அளவுக்கு அவர்களது செயல் மிக கீழ்தரமானதாக போய்விட்டது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பெண்களுக்கு இவர்களிடம் இருந்து யார் பாதுகாப்பு தருவார்கள் என கேள்வி எழுப்பினார்.

திமுகவுக்கும், காங்கிரஸிற்கும் பெண்களை இழிவுபடுத்துவதே நோக்கம். திண்டுக்கல் லியோனி என்ற திமுக பேச்சாளர் பெண்களை இழிவுபடுத்தி பேசியதை திமுக தலைவர் கண்டிக்கவில்லை. அதுமட்டுமல்ல மூத்த திமுக தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, அதன் இளவரசராக ஆகியிருப்பவர் அருவருக்கத்தக்க வகையில் பெண்களை தாக்கி பேசி வருகிறார்.

ALSO READ | உலகிற்கே வழிகாட்டும் மொழி தமிழ் மொழி : பாஜக தலைவர் JP Nadda

1989 மார்ச் மாதம் 25 ம் தேதியை நம்மால் மறக்க முடியாது.  அன்று தான் நம் மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை சட்டமன்றத்துக்குள் திமுக தலைவர்கள் தாக்கிய நிகழ்வு நடந்த நாள். 
இதுதான் திமுகவின் கலாச்சாரம், இதன் தலைவர்கள் எப்போதும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என  கூறினார்.

தமிழில் பேசுவதும், தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றுக்கு வந்துள்ளதும்m தனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும்,  உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்றான தமிழில் சில வார்த்தைகளை பேசுவது தனக்கு பெருமகிழ்ச்சியை கொடுப்பதாகவும்  பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

எதிர்  கூட்டணி தலைமைக்கு  எச்சரிக்கை விடுக்கிறேன், தயவு செய்து உங்கள் தலைவர்களின் வாயை கட்டுப்படுத்தச் சொல்லுங்கள், பெண்களை அவமதித்து பேசுவதை நிறுத்தச் சொல்லுங்கள் என பிரதமர் மோடி கூறினார். 

ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News