பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரானா தொற்று
Ramadoss : பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில அவர் உறுதி செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனையடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க | கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR