உலகளவில் ஓய்ந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மக்கள் மாஸ்க் அணிந்துதான் வெளியே வரவேண்டும் எனவும் அப்படி வராவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மக்கள் மாஸ்க் அணிந்தும், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கொரோனா பரவல் அதிகரித்தே காணப்படுகிறது.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது.
பரிசோதித்ததில் COVID19 உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் விரைவில் நலமாக வேண்டுமென்று கட்சி தொண்டர்களும், மாற்றுக்கட்சியினரும் கூறிவருகின்றனர். அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன்.
அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) July 12, 2022
”தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மோடி அரசை ஃபாலோ செய்வதுதான் திராவிட மாடலா - சீமான் விளாசல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR