சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றும் என கடந்த வாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து இன்று காலையிலேயே போராட்டத்திற்காக பெரும்திரளாக போராட்டக்காரர்கள் வரத் தொடங்கியதால் சென்னை பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
 
தமிழக அரசுப் பணியில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) முன்பு பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக (PMK) தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் சென்னை (Chennai) நோக்கி பல்வேறு வாகனங்களில் சென்னை வந்தனர்.


அவர்கள் சென்னை எல்லையான பெருங்களத்தூர் சோதனைச்சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாமகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. பாமக கட்சி தொண்டர்களை போலீசார் திருப்பி அனுப்ப முயற்சி செய்து வருகின்றனர்.


Read Also | PMK வன்னியர் இட ஒதுக்கீடு: டிசம்பர் 1 முதல் TNPSC முன் பெருந்திரள் போராட்டம்!


இதனால், சென்னைக்குள் செல்ல அனுமதிக்கக்கோரி பெருங்களத்தூர்- ஜிஎஸ்டி நெடுச்சாலையின் (Perungalathur- GST Highway) இரு புறமும் பாமக (pmk) கட்சி தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெருங்களத்தூரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. ஜிஎஸ்டி சாலை முழுவது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சென்னை மக்களுக்கு சிக்கலை எழுப்பியுள்ளது. தற்போது  போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனவே போக்குவரத்து சிக்கல் கொஞ்சம் மட்டுப்பட்டுள்ளது.


Also Read | நமது வெற்றியை நாளை போராட்டம் சொல்லும்: PMK


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR