சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும், முக்கிய இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (10.09.2022) சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 537 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டனர். இந்த சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.


மேலும் படிக்க | மு.க. ஸ்டாலின் வாழ்க - பாரதியார் நினைவு நாளில் இளையராஜா புகழாரம்


நேற்று (10.09.2022) இரவு சென்னையிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, 5,603 இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த நபர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், மது போதை. விதிமீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 


Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்கள் அடையாளம் காணும் FRS கேமரா மூலம் 2,264 நபர்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு 20 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.


சென்னை பெருநகர காவல்துறையின் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், குற்ற நபர்கள்அல்லது சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க | கொடைக்கானலுக்கு சுற்றுலா போறீங்களா? உஷார் மக்களே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ