தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம் மற்றும் வங்க தேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், நேற்று நடைபெற்றன. கொரோனா காலத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடக்க பல வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவல்துறையினரும், தேர்தல் (Assembly Election) அதிகாரிகளும் கடுமையாக உழைத்து, இந்த தேர்தல் தொருவிழாவை நடத்தி முடிக்க பெரிய வகையில் பங்களித்தனர். பல்வேறு இடங்களில் தங்கள் பணிகளையும் பொறுப்புகளையும் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் தானாக முன்வந்து பொது மக்களுக்கு பல உதவிகளை செய்த, பல காவல் துறை வீரர்கள் பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.


அந்த வகையில், தமிழகத்தில், ஒரு சிறு குழந்தையின் தாய், ஓட்டு போட்டு வரும் வரை, அக்குழந்தையை பாசமாக பார்த்துக்கொண்ட ஒரு தமிழக காவல்துறை கான்ஸ்டபிள் டிரெண்ட் ஆகி வருகிறார். தமிழகத்தின் ஒரு வாக்குச்சாவடியில், தனது கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண்மணி குழந்தையுடன் எப்படி வாக்களிக்கச் (Voting) செல்வது என யோசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு பணியில் இருந்த ஒரு கான்ஸ்டபிள் அக்குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். 


ALSO READ: Uber: முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளே, வாக்குப்பதிவுக்கு செல்ல உபரின் இலவச கார் சேவை இதோ...


குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக கூறியதோடு மட்டுமல்லாம்ல், அந்த பெண்மணி வாக்களித்து வரும்வரை, குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார் கான்ஸ்டபிள். அந்த கான்ஸ்டபிளின் ஒரு புகைப்படம் ஆந்திர பிரதேச டிவிட்டர் ஹேண்டிலில் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் டிரெண்டு (Trending) ஆகி வரும் அவர், பலரது பாராட்டுதல்களையும் பெற்று வருகிறார்.



"#TamilNaduElections இல் # APPolice இன் மனிதாபிமான முகம்: தமிழ்நாடுக்கு அனுப்பப்பட்ட @AnantapurPolice கான்ஸ்டபிள், அழுது கொண்டிருந்த 1 மாத குழந்தையை தாய் வாக்களித்து வரும் வரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டு அனைவரது இதயங்களையும் கவர்ந்தார்” என ட்விட்டர் பதிவில் எழுதப்பட்டிருந்தது. பாசமாக குழந்தையை அணைத்தபடி அந்த கான்ஸ்டபிள் வாக்குச் சாவடிக்கு வெளியே நிற்பதை படத்தில் பார்க்க முடிகிறது.


ALSO READ: போடி தொகுதியில் துணை முதல்வரின் மகன் ஓ.பி‌ .ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR