பண மழை கொட்டும் அதிஷ்ட கல் : கடுப்பான கடவுள்..!
உசிலம்பட்டியில் திரைப்பட பாணியில் அதிஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்கள் உட்பட 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளிப்பட்டிணத்தைச் சேர்ந்வர் சண்முகம். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவர் செல்ஃபோன் வாயிலாக பேசியுள்ளார். அப்போது, அவர் தங்களிடம் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை செய்த வைரக்கல் இருப்பதாகவும், அது அதிஷ்டம் தரக்கூடியது எனவும் நம்பிக்கை தரும் விதமாக பேசியுள்ளார்.
ஏற்கனவே இருவருக்கும் இடையில் பழக்கம் இருந்தால் சண்முகமும் சங்கிலி பாண்டி கூறியதையெல்லாம் காதுகொடுத்து கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து, அதன் விலை என்ன என கேட்க.. ஆடு சிக்கி விட்டது என நினைத்து அந்த வைரக்கல்லின் விலை 25 லட்சம் ரூபாய் எனவும் உனக்காக நான் 5 லட்சம் ரூபாயிக்கு வாங்கி தருகிறேன் எனவும் சங்கிலி பாண்டி சமரசம் பேசியுள்ளார்.
இதை கேட்ட சண்முகம், அதிஷ்டம் வந்துவிட்டால் பண மழை கொட்டும் என நினைத்து அதற்காக 5 லட்சம் செலவளிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என நம்பி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு உசிலம்பட்டிக்கு கிளம்பியுள்ளார். அங்கு சென்ற சண்முகத்தை சங்கிலி பாண்டி மற்றும் அவரது நண்பர்களான புதுராஜா, சார்லஸ் ஆகிய மூவரும் வரவேற்று தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த அதிஷ்ட வைரக்கல் குறித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
மேலும் படிக்க | முன்னாள் காதலியை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு செக் வைத்த போலீஸ்..!
இதனையடுத்து அங்கு திடீரென வந்த உசிலம்பட்டி காவலர்களான சிவனாண்டி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் சண்முகத்தின் கையில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததோடு, புதுராஜா, சார்லஸ் ஆகிய இருவரையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சங்கிலி பாண்டி மட்டும் போலீஸார் வருவதை கண்டு பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பணத்தை பறிகொடுத்து விட்டு அதிஷ்ட வைரக்கல்லும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த சண்முகம், உசிலம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அங்கு சென்று விசாரித்தபோது அங்கிருந்த காவலர்கள், சண்முகம் கூறிய புகார் அடிப்படையில் தங்கள் காவல்நிலையத்திற்கு யாரும் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்படவில்லை எனவும் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த சண்முகத்திடம் புகாம் மனு பெற்ற உசிலம்பட்டி காவலர்கள் சண்முகம் கூறிய தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், உசிலம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சிவனாண்டி மற்று் சரவணன் ஆகிய இருவரும் சங்கிலி பாண்டிக்கு உடந்தையாக இருந்து நாடகமாடி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் படிக்க | அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மேலும் ஒருவர் படுகொலை..!
இதனை அடுத்து காவலர்கள் இருவர், சங்கிலி பாண்டியின் நண்பர்களான புதுராஜா, சார்லஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அது மட்டுமின்றி அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை மீட்ட போலீஸார் தப்பி ஓடிய சங்கிலி பாண்டியை தேடி வருகின்றனர். கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றும் கும்பலுக்கு மூட நம்பிக்கைகளும் பேராசையும்தான் நுழைவு வாயில் என புரிந்துகொள்ள வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR