சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு திமுகவை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் கேன் கொண்டு வந்த சவுந்தரராஜனை திடீரென்று 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. சுதாரிப்பதற்குள் அவர்கள் கொண்டுவந்த அரிவாளால் சவுந்தரராஜனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவர் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திமுக பிரமுகரான சௌந்தரராஜன் அதிமுகவில் உறுப்பினராக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. திமுக சார்பில் இன்று தண்ணீர்பந்தல் திறப்பதற்கான தகராறு காரணமாக இக்கொலை நடந்து இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இக்கொலைக்கான சம்பவத்தில் அதிமுக நிர்வாகி கணேசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | தங்கையின் காதலனுக்கு கத்திக்குத்து - அண்ணன் கைது..!
சென்னையின் மைய பகுதியான பிராட்வே பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்தக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த மதன் என்பவரை பல்லவன் சாலையில் 4பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆசை இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையோடு எரித்து கொன்ற கொடூரன்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR