டிஐஜி தற்கொலை விவகாரம்: 8 பேருக்கு போலீசார் சம்மன்... என்ன காரணம்?
DIG Vijayakumar Suicide Case: டிஐஜி தற்கொலை தொடர்பாக கருத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 8 பேருக்கு போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
DIG Vijayakumar Suicide Case: கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீஸ் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. டிஐஜி தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் கருத்து
கடந்த 10 ஆண்டுகளாக ஓசிடி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டிஐஜி ஒரே மருத்துவரை பார்க்காமல், மாற்றி மாற்றி பார்த்து மருந்து எடுத்து வந்துள்ளார். அது தொடர்பாக இணையதளத்தில் நிறைய குறிப்புகள் எடுத்து ஆயுர்வேத மருந்துகளை எடுத்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
அவருடைய மகள் மருத்துவம் படிப்பதற்கு தயார் செய்துவிட்டதாகவும் சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 2 நாளுக்கு முன்பே தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக, காவல் துறையில் இல்லாத ஒரு நண்பரிடம் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. அவரும், டிஐஜி விஜயகுமாரும் ஆனைகட்டிக்கு போவதாக திட்டமிடப்பட்டு, நண்பர் வரவில்லை என்பதால் போக முடியவில்லை என கூறப்படுகிறது.
அவர் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவே அதாவது பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போது தனது தனி பாதுகாவலரிடம் துப்பாக்கி எல்லாம் எங்கே வைப்பீங்க, பத்திரமாக இருக்கிறதா என கேட்டு பார்த்துள்ளார். மேலும், அந்த இடத்தை சென்று பார்த்தும் உள்ளார். இதையடுத்து அவர் அடுத்த நாள் காலை தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது போலீசார் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டிஐஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தங்களது கருத்துகளையும் பதிவு செய்தனர். சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர்.
மேலும் படிக்க | RSS கூட்டத்திற்காக விடுமுறை; பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டிஸ்!
8 பேருக்கு சம்மன்
இந்நிலையில், போலீசார் டிஐஜி தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், கருத்து கூறியவர்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு, டிஐஜி தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அந்த சம்மன் அடிப்படையில் கோவை ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். அப்படி அவர்கள் ஆஜராகும்பட்சத்தில் அவர்களிடம் டிஐஜி தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் கரிகாலன் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ