சென்னை: கொரோனா பரவலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகையே புரட்டி போட்டு புரட்சி செய்திருக்கும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு வகையாக உருமாறிக்கொண்டே இருக்கும் கொரோனாவின் புதிய அவதாரமான ஒமிக்ரான், பழைய மாறுபாடுகளை விட வீரியமாக இல்லாவிட்டாலும், விரைவாக பரவி வருவதால், பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.


இந்த நிலையில், பொங்கல் நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கலந்தாலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.


தமிழகத்தில் கோவிட் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் (Corona Restrictions) விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.


ALSO READ | இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?


ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்கள் பள்ளிக்கு செல்லத் தேவையில்லை. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க முடியும், திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை என அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ நிபுணர்களின் கலந்தாலோசனையில் எடுக்கப்படும் முடிவின்படி, நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்படலாம், வார இறுதி நாட்களில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு (Lockdown or Curfew) அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


கொரோனா தொற்று பரவல், நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்தை எட்டியுள்ளதால், தற்போது பொங்கல் பண்டிகையில் கொண்டாட்டங்களால், நிலைமை மோசமாகாமல் தடுப்பதற்காக முதலமைச்சர் இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.


ALSO READ:ரேஷன் கடைகளில் பனை வெல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இனிப்பு செய்தி!!


தமிழர் திருநாளான பொங்கல் விழா பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் கோலாகலாமாக கொண்டாடாவிட்டாலும், ஓரளவு சிறப்பாக கொண்டாடலாம் என்று மக்கள் செயல்பட்டால், கொரோனாவின் பரவல் அதிகரித்துவிடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.


2020 மார்ச்சில் தொடங்கிய கொரோனா பாதிப்பு அலை அலையாக உயர்ந்தும் தாழ்ந்தும் சென்றாலும், பாதிப்புகள் என்னவோ முடியவே இல்லை. 


தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதை முன்னிட்டு, தடுப்பூசி போடாதவர்களை, போடச் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பொதுவெளிகளில் நடமாட்டத்தைக் குறைப்பது, முகக்கவசம் அணிவது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


ஏனெனில். கொரோனா தொற்று பரவல், மார்ச் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | தமிழகத்தில் முழு ஊரடங்கு?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR