சென்னை: 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால், அந்த மாவட்டங்களில் பொங்கல் பரிசு (Pongal Prize) வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. ஆனால் தேர்தல் நடைபெறதா 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கலாம் என்றும் கூறியிருந்தது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் (Local Body Elections) நடைபெறும் மாவட்டங்களில், தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசுப்பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு (TN Govt) அறிவித்திருந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 29 அன்று சென்னையில் நடந்த பொங்கல் பரிசு பேக்கேஜிங் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi k Palaniswami) பொங்கல் பரிசு வழங்குவதை தொடங்கி வைத்தார். அன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரிசி பெறும் 2.5 கோடி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000. நியாய விலைக்கடைகளில் இலவச பொங்கல் பரிசு மூட்டைகளை வழங்க தமிழக அரசு நிர்ணியம் செய்துள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அதனுடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இருக்கும்.


அன்று முதல் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு (Pongal Gift) வழங்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என்றும், தேர்தல் நடைபெறதா 9 மாவட்டங்களில் வழங்கலாம் என்று உத்தரவிட்டது.


இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசுப்பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் எந்த தேதியில் வழங்கப்படும் என்று அறிவிக்கவில்லை.


தற்போது அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது  27 மாவட்டங்களுக்கு வரும் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது