பொங்கலோ பொங்கல்! மகிழ்ச்சி பொங்கி பூவாய் மலர வாழ்த்துக்கள்
ஜனவரி 14ஆம் தேதியான இன்று தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள் (Thanks Giving Day) இன்று.
புதுடெல்லி: ஜனவரி 14ஆம் தேதியான இன்று தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள் (Thanks Giving Day) இன்று.
தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கெல்லாம் பொங்கல் (Pongal) பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போல எந்தவொரு மதம் சார்ந்த பண்டிகையாக பொங்கல் பார்க்கப்படுவதில்லை. தமிழரின் திருவிழா பொங்கல், பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
சூரியன் மகரம் ராசிக்கு பயணிக்கும் நாள் தை திருநாளாக கொண்டாடப்படுகிறது. நீர் (Water) வளம் கொண்ட இடங்களில் முப்போகமாக விவசாயம் நடைபெறும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீரை அடிப்படையாகக் கொண்டும், மழையின் நீரைத் தேக்கிவைத்தும் ஒரு போகம் விவசாயம் நடைபெறும். எனவே நாடு முழுவதும், மார்கழி மாத அறுவடையே நடைபெறும் என்பதால், இந்த சமயத்தில் இந்தியா முழுவதுமே வெவ்வேறு பெயரால் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
Also Read | அருள்மிகு சங்கமேசுவரர் திருக்கோவில்!
அறுவடை முடிந்து கிடைத்த புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு) போன்றவையே படையலாக படைக்கப்படும்.
பல தலைவர்களும் தமிழர் திருநாள் பொங்கலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேபோல், பல்வேறு நிறுவனங்களும், வங்கிகளும் தமிழர் திருநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.
பொங்கல் விழா, தமிழர் தேசிய விழாவாக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் சாதி,மத பேதம் இல்லாமல் பொங்கலை கொண்டாடுகின்றனர். கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் (Tamil Nadu) இஸ்லாமியக் குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல், நாட்டுக் காய்கறிகளைச் சமைத்து சாப்பிடும் பழக்கமும் பல இடங்களில் உள்ளது.
Also Read | சத்குருவின் பொங்கல் வாழ்த்து, விவசாயத்தை போற்றுவோம்...
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR