கைதா-விசாரணையா..? பொன்முடியை அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றது ஏன்..?
தமிழக அமைச்சர் பொன்முடி, 13 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையினரின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் தாெடர் சாேதனையில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு அவர் அமலாக்கத்துறையினரின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை:
தமிழ்நாட்டின் உயர்கல்வி துறை அமைச்சராக இருப்பவர், பொன்முடி. இவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் பல மணிநேரம் சோதனையில் ஈடுபட்டனர். பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகளில் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பொன்முடியின் மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியின் வீட்டிலும் சோதனை நடந்தது.
மேலும் படிக்க | ரூ.53 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு - சிசிடிவி வீடியோ வெளியீடு
என்ன வழக்கு..?
2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சர் பொன்முடியும் அமைச்சராக இருந்தார். இவரும் இவரது மகன் கவுதம சிகாமணியும் அவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அமைச்சர் பொன்முடி, கடந்த ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுப்பட்டார். சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அவர் மீது தொடங்கப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்,,!
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சுமார் 13 மணிநேரம் சோதனை நடைப்பெற்றது. இந்த நிலையில், சைதாப்பேட்டையில் இருக்கும் அவரது இல்லத்திலிருந்து சாஸ்திரி பவனுக்கு விசாரணைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். பொன்முடியின் காரிலேயே அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
கைதா..? விசாரணையா..?
அமைச்சர் பொன்முடியை தற்போது விசாரணைக்கு அழைத்து சென்றுள்ள அதிகாரிகள், அவரை கைது செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில், 3 நாட்களுக்கும் மேலாக சோதனை நடைப்பெற்றது. அவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சோதனை, செந்தில் பாலாஜியின் பழைய வழக்கை கிளறியதால் தொடங்கப்பட்டது. இறுதியில் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களும் சாட்சியங்களும் சிக்கியதால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது இதே நிலைதான் பொன்முடிக்கும் நேரும் என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவுற்ற பின்னரே கைதுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பது தெரியும்.
நிகழ்ச்சிகள் ரத்து..!
அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி கலைக்கல்லூரியில் பள்ளி மாணவர்ளுக்கான விழா ஒன்று நடைபெறுகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக நடைப்பெறும் அந்த விழாவில், தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ மற்றும் கல்லூரி கனவு வழிக்காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் பொண்முடி கலந்து கொள்ள இருந்தார். இன்று காலை சோதனை நடைப்பெற்றதை அடுத்து அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் படிக்க | காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ