மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் - மின்வாரியம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மின் மீட்டர்களை மாற்ற வேண்டும் என மாநில மின் வாரியத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 17, 2023, 04:11 PM IST
  • "நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்"
  • "சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000க்கும் அதிகமான மீட்டர்கள் பழுது"
  • மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப உத்தரவு
மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் - மின்வாரியம் உத்தரவு title=

தமிழகத்தில் உள்ள பழுதடைந்த அனைத்து மின் மீட்டர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறி மாநிலத்தின் மின்வாரியத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து மின் வாரியத்துறை வெளியிட்டுள்ள சுற்றரிக்கையில், நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. 

மின் மீட்டர்களை மாற்ற உத்தரவு..!

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தங்கள் வீட்டில் மின் மீட்டர்கள் பழுதடைந்து உள்ளதாகவும் இதனால் தங்களுக்கு அதிக அளவில் மின்சார கட்டணம் காண்பிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தனர். மேலும், அதிக மழை அல்லது வேறு சில காரணங்களால் மின் மீட்டர்கள் பழுதாகின்றன. இதனால், தமிழக மின்சார துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, அதை தடுக்கும் வகையில் ஒரு சுற்றரிக்கையை மின்துறை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எதற்காக மாற்ற வேண்டும்..? 

மின் மீட்டர்களை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்காகவும், உரிய வருவாய் ஈட்டும் வகையிலும் தமிழக மின்துறை மீட்டர் பாக்ஸ்களை மாற்ற வேண்டும் என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையை மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். தமிழகத்தில் மீட்டர் பாக்ஸ்கள் குறித்து தொடர் புகார்கள் எழுந்ததை அடுத்து, மின்வாரியத்துறையினர் சமீப காலமாக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தினர். இதில், தமிழகத்தின் முக்கிய மாநிலங்களாக கருதப்படும் சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000க்கும் அதிகமான மீட்டர்கள் பழுது ஆகியிருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | ஆளுநர், அமலாக்கத்துறை... போட்டுத்தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன சொன்னார் தெரியுமா?

அதிகாரிகளுக்கு உத்தரவு..!

தமிழகம் முழுவதும் உள்ள மின் மீட்டர்களை மாற்றிய பிறகு, அது குறித்த விவரங்களை மின் அஞ்சலில் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என அந்த சுற்றரிக்கையில் அனுப்பப்பட்டுள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை..

தமிழகத்தில் உள்ள மின் வாரியத்துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்கள் பணிகளை நிரந்தரம் செய்ய வேணும் என்று கூரி கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைப்பொதுச்செயலாளர் சரவணன் மனு அனுப்பியிருந்தார். அதில், தமிழக மின்சாரத்துறையில் 57 ஆயுரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, மின் வாரியத்தில் பணியாளர்கள் இல்லாததால் பல ஆண்டுகளாகவே மின் கம்பங்கள் நடுதல் மின் மாற்றி அமைத்தல், மின் தடையை சரி செய்தல் போன்ற பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு அந்த பணிகள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடந்த ஆட்சியின் போதே பலமுறை மனு அளித்ததாகவும் போராட்டங்களிலும் ஈடுபட்டதாகவும் ஆனால் அது எதுவுமே பயணளிக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | 'கண்மணி அன்போடு காதலன்' - காதல் கடிதத்தை பகிர்ந்த விக்ரமன்! வெளியான ட்விஸ்டு - சிக்கிய கிருபா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News