“பூணூல்” விவகாரம்: கமலுக்கு தமிழக பிராமணர் சங்கம் கண்டனம்
பூணூல் பற்றி கருத்து கூறிய கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskKamalHaasan என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்களின் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில், கடந்த மாதம் ஜூன் 27 ஆம் தேதி, ட்விட்டர் பக்கத்தில் அவரது ரசிகர் ஒருவர், நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு கடந்த ஜூன் 30 ஆம் தேதி கமல்ஹாசன் பதில் அளித்திருந்தார். அதில், "நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல்“ அதனாலேயே அதை தவிர்த்தேன்".
கமல்ஹாசன் பதிலால் கோபமடைந்த பிராமணர், அவருக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பூணூல் குறித்து கீழ்த்தரமாக விமர்சித்த பிராமணகுல துரோகி நடிகர் கமல்ஹாசனை வன்மையகா கண்டிக்கின்றோம். பிராமண மக்களின் புனித அடையாளத்தை கீழ்த்தரமாக விமர்சித்தது, அவரது வக்ரபுத்தியை காட்டுகிறது. பூணூலை குறைசொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? வரும் தேர்தலில் பிராமண சமூகத்தினர் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என கூறப்பட்டு உள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.