மின்வெட்டு விவகாரம்: அண்ணாமலை சொல்வது எல்லாம் பொய் - தங்கமணி ஆவேசம்!
கடந்த 16 ஆண்டு காலமாக மின்வாரியத்தில் தவறு நடந்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருவது முற்றிலும் பொய்யான தகவல் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் முன்னாள் சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தங்கமணி, ''கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை நிலவி வருகிறது. ஆளும் திமுக அரசு மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலக்கரி கிடைக்கவில்லை எனும் தவறான தகவலை பரப்பி வருகிறது. எப்போதுமே மத்திய அரசு தமிழகத்திற்கு 50,000 அல்லது 55,000 டன்களுக்கு மேல் நிலக்கரியை வழங்கியது இல்லை. குறிப்பாக எந்த மாநிலத்திற்கும் முழுமையான அளவு நிலக்கரியை மத்திய அரசு வழங்கியது இல்லை.
எனவே, மத்திய அரசு வழங்கிய நிலக்கரியை வைத்து தான் அதிமுக ஆட்சியில் மின்வெட்டு ஏற்படாமல் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், கோடைக்காலம் நெருங்கும் நிலையில் போதுமான அளவு நிலக்கரியை தமிழக அரசு கையிருப்பு வைக்காமல், மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கியதும் பழியை மத்திய அரசின் மீது போடுகின்றனர்.
மேலும் படிக்க | தங்கமணி வீட்டில் சோதனை - அதிகாரிகளின் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகை!
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு பிரச்சனையும் கூடவே வருவதாக தமிழகம் முழுவதும் மக்கள் பேச தொடங்கிவிட்டனர். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தடையில்லா மின்சாரம் கிடைத்ததையும் மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 16 ஆண்டு காலமாக மின்வாரியத்தில் தவறு நடந்த காரணத்தால் இதுபோல் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து முற்றிலும் பொய். வேண்டும் என்றால் மத்தியில் பாஜக ஆட்சி தான் உள்ளது. மின்வாரியத்தில் முறைகேடு நடந்து இருந்தால் சிபிஐ வைத்து விசாரிக்கலாம் அதற்கு நான் தயாராக உள்ளேன்''. இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மேலும் படிக்க | கிரிப்டோவில் முதலீடு; அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR