பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவியை ரூ. 2.75 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில்  பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்காக (ஊரகம்)  ரூ.1,805 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் புதிய வீடுகள் கட்டுவோருக்கு  தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவி ரூ.2.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) இன்று அறிவித்துள்ளார்.


இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (Pradhan Mantri Awas Yojana)‌ (ஊரகம்‌) மத்திய அரசு பங்களிப்புடன்‌ தமிழ்நாட்டில்‌ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2016-17 முதல்‌ 2019-20ஆம்‌ ஆண்டுவரை இத்திட்டத்தின்‌ கீழ்‌ தமிழ்நாட்டில்‌ 6 ஆயிரத்து 968 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4,01,848 வீடுகள்‌ கட்டப்பட்டு வருகின்றன.


பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்‌ (ஊரகம்‌) கீழ்‌ ஒரு வீட்டிற்கான அலகுத்‌ தொகை ரூ.1,20,000 ஆகும்‌. இதில்‌ மத்திய
அரசின்‌ (60%) பங்குத்‌ தொகை ரூ.72,000/- மற்றும்‌ மாநில அரசின்‌ (409 பங்குத்‌ தொகை ரூ.48,000/- ஆகும்‌. இத்துடன்‌ கான்கிரீட்‌ மேற்கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு, கூடுதல்‌ நிதியாக ரூ.50,000/- ஒவ்வொரு வீட்டிற்கும்‌ அளித்து வருகிறது. இத்தொகையுடன்‌ ஒரு வீட்டிற்கான மொத்த அலகு தொகை ரூ.1,70,000 ஆகும்‌. இந்த அலகுத்‌ தொகையுடன்‌ கூடுதலாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அறிவிக்கப்பட்ட ஊதியத்தின்‌ அடிப்படையில்‌ 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியம்‌ ரூ.23,040/- மற்றும்‌ தனி நபர்‌ இல்லக்‌ கழிப்பறை கட்டும்‌ பணிக்கு ரூ.12,000/– ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.


ALSO READ | பொங்கல் பரிசுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!


இத்திட்டத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து என்னால்‌ ஆய்வு செய்யப்பட்டது. தற்போது கட்டுமானப்‌ பொருள்களின்‌ விலையேற்றம்‌ காரணமாகவும்‌, கொரோனா காலத்தில்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்டுள்ளதாலும்‌, மேற்கண்ட அலகுத்‌ தொகையினைக்‌ கொண்டு ஏழை எளிய மக்கள்‌ வீட்டினை கட்ட இயலாத நிலை உள்ளதாகவும்‌, தகுதியான குடும்பங்கள்‌ வீடுகளை தாங்களே கட்ட இயலாத நிலையில்‌ உள்ளதாகவும்‌ எனது ஆய்வில்‌ தெரிய வந்தது.


எனவே ஏழை எளிய மக்களின்‌ கனவான குடியிருப்பு வீடுகட்டுவதை உறுதிப்படுத்தும்‌ வகையில்‌, தமிழ்நாடு அரசால்‌ ஏற்கனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூ.50,000/- ஐ உயர்த்தி ரூ.1,20,000/– வழங்க உத்தரவிட்டுள்ளேன்‌. இதன்‌ மூலம்‌ ஒவ்வொரு வீட்டிற்கும்‌ அலகு தொகை ரூ1,70,000/- லிருந்து ரூ.2,40,000/- ஆக உயாத்தப்படுகிறது. இந்த தொகையுடன்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ ரூ.23,040/- மற்றும்‌ தனி நபர்‌ இல்லக்‌ கழிப்பறை கட்ட ரூ.12,000/- சேர்த்து மொத்தம்‌ ஒரு வீட்டிற்கு ரூ.2,75,040/- வழங்கப்படும்‌. இதற்காக தமிழ்நாடு அரசால்‌ கூடுதலாக ரூ.1805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்‌. இதனால்‌ சுமார்‌ 2,50,000 பயனாளிகள்‌ பயன்‌ பெறுவர்‌.


ALSO READ | ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த விசாரணைக்கு ஆஜராக ரஜினிகாந்திற்கு சம்மன்


இந்த கூடுதல்‌ நிதி உதவியால்‌ கட்டி முடிக்காமல்‌ உள்ள வீடுகள்‌ கட்டி முடிக்கப்படுவதுடன்‌, தாங்களே கட்ட வசதியில்லாத பயனாளிகளுக்கும்‌ வீடுகள்‌ ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும்‌ உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ உதவியோடு கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளேன்‌. ஏழை எளிய மக்களின்‌ துயர்‌ துடைக்கும்‌ அரசாக மாண்புமிகு அம்மா அவர்களின்‌ அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்று பெருமிதத்துடன்‌ இதை தெரிவித்துக்‌ கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR