திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

DMK ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (MK.Stalin) கூறியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரத்தில் மக்களிடம் விண்ணப்பம் தந்து பிரச்னைகள் கேட்டறியப்படும். விண்ணப்பத்தில் மக்கள் குறைகளை எழுதித்தந்தால் 100 நாட்களில் பிரச்னை தீர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் DMK தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது., “பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. AIADMK ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி. 


இதை தொடர்ந்து பேசிய அவர்., “மக்கள் கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஜனவரி 29 ஆம் தேதி முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் புதிய கோணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். கொரோனா காலத்தில் மக்களை AIADMK Govt கைவிட்டுவிட்டது; குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரின் வாழ்க்கையையும் நிர்கதியாக்கி விட்டது. புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளனர். தமிழகத்தின் கடன் சுமையை ரூ.5 லட்சம் கோடியாக மாற்றியது தான் AIADMK-யின் சாதனை. 


ALSO READ | மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்வதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: R.S.பாரதி


தமிழகத்தில் (Tamil Nadu) விலைவாசி விஷம் போல் உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு, சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்பு இல்லை. தேர்தலை மனதில் வைத்து ரூ.2,500 கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் எந்த தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் இல்லை. தமிழக மக்களை அதிமுக அரசு முழுமையாக கைவிட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது. மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் பணி. மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காண்போம். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். 


தேர்தல் அறிக்கை வேறு, விண்ணப்பத்தில் மக்கள் குறைகள் எழுதி கொடுத்தால் போதும், மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன். மக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை www.stalinani.com என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள். சொன்னதை செய்வோம்; செய்வதை தான் சொல்வோம் என்பதற்கு ஏற்பவே, கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளேன். சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR