செல்போன் பறிப்பில் ஈடுபட்ட `புள்ளிங்கோ` - மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
பட்டரவாக்கம் ஆவின் சாலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட டியோ புள்ளிங்கோ 2 பேர் தப்பிக்க முயன்ற போது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி, கொரட்டூர், ஆவின் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பாடி குப்பத்தை சேர்ந்த நவீன்(18), ரியாஸ்(18) ஆகிய 2 பேரை பொதுமக்கள் மற்றும் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சௌந்தரவல்லி ஆகியோர் மடக்கி பிடித்தனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் செங்குன்றம் பகுதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து பட்டரைவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து ஆவின் பால் பண்ணை அருகே வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாத புதிய டியோ ஸ்கூட்டரில் முகக்கவசம் அணிந்து வந்த இருவர் அருண்குமாரிடம் வழிகேட்பது போல் ஸ்கூட்டரை மெதுவாக இயக்கி வந்தனர். அப்போது திடீரென அருண்குமாரின் கையில் இருந்த செல்போனை பிடுங்கிக்கொண்டு அவர்கள் தப்பியோடினர்.
மேலும் படிக்க | செல்போன் பறிப்பு வழக்கு: சல்மான்கான் எடுத்த புது முடிவு!
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவர்களை துரத்திச் சென்று பிடித்த நிலையில் இருவரும் வலிப்பு நோய் வந்தவர்கள் போல் நடித்து ஏமாற்றி தப்பிக்க முயன்றதால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவம் நடந்தபோது அந்த வழியாக பணிமுடிந்து வீடு திரும்பிகொண்டிருந்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சௌந்தரவல்லி குற்றவாளிகளை பிடித்து காவல்துறை கண்ட்ரோல் ரூம்-க்கு தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த கொரட்டூர் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி, கொரட்டூர், ஆவின் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
பொதுமக்கள் மடக்கிபிடித்து தாக்கியதால் காயமடைந்த இருவரையும் முன்னதாக போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | காரில் சென்று வழி கேட்பது போல் நடித்து தொடர் செல்போன் கொள்ளை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR