புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தண்ணீர் மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆய்வின் ஒருபகுதியாக குருமாபெட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான ஆலையில் ஆய்வு மேற்கொன்டனர். முறைகேடான வகையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



முப்பதிற்கு மேற்பட்ட அதிகாரிகளுடன் சம்பவயிடத்திற்கு சென்ற ஆளுநர் கிரண்பேடி அவர்கள் ஆலையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.



ஆய்வின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி அவர்கள்... மதுபானங்கள் ஆடம்பரத்திற்கான பொருள், குடிநீர் ஏழை எளிய மக்களுக்கான அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டார். மேலும் நிலத்தடி நீரை முறையாக பயன்படுத்துமாறு மதுபான ஆலை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.