Viral Video: பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு திருமணம் முடிந்தவுடன் உணவு அருந்திவிட்டு செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது பரவலான வழக்கமாக இருந்து வருகிறது. அந்த தாம்பூல பையில் சாத்துக்குடி, மாம்பழம், லட்டு, புத்தகம், மரக்கன்றுகள், பூச்செடிகள், அப்படி இல்லை என்றால் தேங்காய் ஆகிய போட்டு தாம்பூல பை கொடுப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவும் மகாலட்சுமி மண்டபத்தில்...


ஆனால், தாம்புலத்தில் மது பாட்டில்களை போட்டுக்கொடுத் சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. சென்னை சேர்ந்த நிர்மல் என்பவருக்கும் புதுச்சேரி வாணரப்பேட்டையை  சேர்ந்த ஆரதி என்ற மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் நகரப் பகுதியில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. 


மேலும் படிக்க | தமிழகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு தொடர்ந்து வலுக்கும் கண்டனம்! முழு விவரம்!


வெற்றிலை பாக்குடன் மது


இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரி சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், மணமகன் தரப்பில் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம், வெத்தலை, பாக்கு ஆகியவற்றுடன் குவாட்டர் சரக்கு பாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.


எக்ஸ்ட்ரா வாங்கிய சிலர்


ஆனால் சரக்கு பாட்டில் தாம்பூல பையை சில பேர் இரண்டு கொடுங்கள் என்று கேட்டுக் வாங்கியும் சில பேர் சரக்கு பாட்டில் வேண்டாம் வெறும் தாம்பூல பையை மட்டும் கொடுங்கள் என்று வாங்கி சென்றனர். இந்த தாம்பூல பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திருமணத்திற்கு வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருமே இதை பெற்றுச் சென்றனர்.


விருந்தாளிகளை குஷிப்படுத்த..


திருமணத்திற்கு வந்தவர்களை குஷிப்படுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கொதிக்கும் நெட்டிசன்கள்


சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் மது குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அவர்களின் ஆசியை நிறைவேற்றவே இதை செய்ததாக மணமக்களின் நண்பர்கள் கூறினர். அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தின் வீடியோவின் தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல் தங்களுக்கு நண்பரோ, உறவினரோ இல்லை என சில நெட்டிசன்கள் புலம்பி தள்ளினாலும், திருமண நிகழ்ச்சியில் அதுவும் பொதுவெளியில் மது பாட்டில்களை வழங்குவது என்பது நல்ல உதாரணமாக இல்லை எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | மேகதாது விவகாரம்: 'கண்டனம் வரவில்லை... உரிமைகளை விட்டுக்கொடுக்கும் ஸ்டாலின்' - அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ