ராமநாதபுரத்தில் மண்பாண்ட தொழிலாளர்களை சோதித்த மழை!
Sayalkudi Pottery Workers : மூன்று மாத கால உழைப்பு. ராமநாதபுரத்தில் பெய்த மழையால் பறிபோனது. மண்பாண்ட தொழிலாளர்களின் துயரக் கதை!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களது முன்னோர்கள் காலத்திலிருந்து பாரம்பரியமாக மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் அவர்கள் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ‘எங்க படகு ஏலம்போய், எங்க கிட்டயே இரும்பா வருது’ - தமிழக மீனவர்கள் கண்ணீர்
மேலும் இவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை அப்பகுதியில் பிரதான தொழிலாக விளங்குகிறது. பனைத் தொழிலாளர்களுக்கு பதநீர் இறக்க பயன்படும் கலயங்கள், கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள், அடுப்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை தங்களது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
அதன்மூலம் வரும் வருவாயை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சாயல்குடி பகுதியில் திடீரென கனமழைக் கொட்டித்தீர்த்தது. இதில், மூன்று மாத காலமாக தாங்கள் குடும்பத்துடன் உழைத்து தயார் செய்த மண்பாண்ட பொருட்கள் அனைத்தும் மழையில் கரைந்து நாசமாகின. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், மழையில் கரைந்து சேதமடைந்த மண்பாண்டங்களை தங்களது குடும்ப உறுப்பினர்கள் மூலமே தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையில் சேதமடையாத ஒன்றிரண்டு மண்பாண்டங்களை பிரித்தெடுக்கும் பணியில் பெற்றோர்களுக்கு உதவியாக குழந்தைகளும் ஈடுபடும் காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
மேலும் மிகவும் நலிவடைந்த நிலையில் வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் தங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மழைக் காலங்களில் தாங்கள் பாதிக்காத வண்ணம் சிமெண்ட் அட்டைகளால் ஆன நிரந்தர மேற்கூரையும் அமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ