தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று, (ஜூலை 2)வெள்ளிக்கிழமையன்று, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் ( Chennai வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் (Tamil Nadu), வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், சேலம், தருமபுரி, சிவகங்கை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய கூடும்.
ஏனைய பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ( (TN Rain) பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் பொதுவாக, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவை ஒட்டி இருக்கும். வருகிற 5ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் அந்த குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ALSO READ: TN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR