சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளரான வி கே சசிகலா (VK Sasikala), பெங்களூரு சிறையில் இருந்து விரைவில் விடுவிக்கப்படலாம் என்று கூறியதோடு, அபராதத் தொகையைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு தனது சட்ட ஆலோசகர் குழுவிடம் வி கே சசிகலா கூறியதாகக் கூறப்படுகிறது. நான்கு ஆண்டு சிறைத் தண்டனையைத் தவிர, முறைகேடு சொத்து வழக்கில் அவருக்கு 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"அபராதத் தொகையைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அவர் எங்களிடம் கேட்டுக் கொண்டார்" என்று அவரது ஆலோசகர் ராஜா செந்தூர் பாண்டியன் (Raja Sendura Pandiyan) தெரிவித்தார். சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார். 


இன்னும் ஓரிரு நாட்களில் வி.கே. சசிகலா விடுதலை?


அவர் சொன்ன ஒருவாரம் முடிவடைய உள்ளது. இன்னும் இரண்டும் நாட்களில் குற்றவழக்கில் சிறைவாசம் சென்ற வி கே சசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


ALSO READ | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?


சொத்து குவிப்பு வழக்கில் மிக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜெயலலிதாவின் உதவியாளரான வி கே சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் இப்போது நிறைவடைய உள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 10 கோடி அபராதத்தொகை இன்னும் கட்டவில்லை. அபராதத்தொகைக் கட்டிய பிறகு, அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்.


சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி செல்வி. ஜெயலலிதா:


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (J Jayalalithaa) மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் என மொத்தம் நான்கு பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  2014-ம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா நான்கு ஆண்டு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது.


ALSO READ | ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் -சசிகலா


உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதா 2016 டிசம்பர் ஆறாம் தேதியன்று மறைந்தார்.  பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையே 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் அடைக்கப்பட்டனர்.


முதல்வர் கனவு: 


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க-வின் (AIADMK) பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், 2014-ம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது என்பதால் தமிழக முதலமைச்சராகும் சசிகலாவின் எண்ணம் நிறைவேறாமல் போனது.