நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதற்காக நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 29-ஆம் தேதி ரசிகர்களை சந்தித்து ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


ரஜினியின் இந்த அரசியல் வருகைக்கு நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருந்தார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக என தெரிவித்துள்ளார்.


அதை தொடர்ந்து,அரசின் குறைகளை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல, எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர், பிப்ரவரி 21-ந் தேதி கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளேன். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன்.


ராமநாதபுரத்தில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளேன். மக்கள் ஆதரவுடன் இந்த சுற்றுப் பயணத்தை தொடங்குகிறேன் என்றார்.


இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனனின் அரசியல் வருகைக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதனால் விரைவில் மீண்டும் இரு துருவ அரசியல் தமிழகத்தில் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.