புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினி, தனது வீட்டில் மதியம் ஒன்றரை மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். நான் சிறிய கருவி, நீங்களே அனைத்திற்கும் அடிப்படை என ரசிகர்களுக்கும் மக்களுக்கும் செய்தியை தனது செய்தியாளர் சந்திப்பின் மூலம் ரஜினி தெரிவித்தார் ...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது அரசியல் பிரவேசம் குறித்து விளக்கம் அளித்தார். தமிழக மக்களை நேரடியாக சந்தித்து பேச விரும்பியதாக கூறிய ரஜினி, கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இருந்தாலும் மக்கள் பணிக்காக நான் அரசியலுக்கு வர விரும்ப நினைத்தேன். ஆனால், எனது மருத்துவர்கள் அதற்கு ஆட்சேபங்களை தெரிவித்தனர். உயிருக்கே ஆபத்து என்று சொன்னார்கள். ஆனால், மக்களுக்கு பணியாற்றும்போது உயிரே போனாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன், அதனால் தான் தீவிர ஆலோசனைக்கு பிறகு களம் இறங்கியுள்ளேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.


Also Read | Big Announcement Rajnikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி


தேர்தலில் நான் வெற்றி பெற்றால், அது என்னுடைய வெற்றியல்ல, மக்களின் வெற்றி என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த ரஜினி, தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அவர்களையும் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் தன்னுடன் இருப்பது மிகப்பெரிய பலம் என்று ரஜினி தெரிவித்தார்.


பாஜகவின் நிர்வாகியாக இருந்தவர் அர்ஜுன மூர்த்தில். பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பதவி வகித்தவர். வேல்யாத்திரையில் கலந்துகொண்டு கைதானவர் என்பது கூடுதல் தகவல். அவர் தனது சமூக ஊடக கணக்கில் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



மாற்றுவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என்று கூறிய ரஜினி, அண்ணாத்த திரைப்பட படபிடிப்பு முடிந்த பிறகு, முழுமையாக கட்சிப் பணிகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் (Rajinikanth).


செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்துடன் கலந்துக் கொண்ட தமிழருவி மணியன் பேசும்போது, ’வெறுப்பு அரசியல் வேரோடிப் போயிருக்கும் தமிழகத்தில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கிறார் ரஜினி, தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே வழிகாட்டும் அரசியலை நடத்திக் காட்டுவார்’ ரஜினி என்று தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் (Assembly elections) ரஜினி சாதித்துக் காட்டுவார் என்று தமிழருவி மணியன் கூறினார்.


Also Read | அரசியல் களத்தில் #ரஜினி... 234 இடங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR