நடிகரும், அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் பிராத்தனை செய்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், 15 நாட்கள் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்தார். இமயலை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் நேற்று ரிஷிகேஷ் சென்றிருந்தார். அங்கு அவரிடம் பகுதி நேர அரசியல்வாதி என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 


அதற்கு ரஜினி பதில் கூறியதாவது....! 


தாம் இன்னமும் முழுமையான அரசியல்வாதியாகவில்லை என்று மட்டுமே குறிப்பிட்டதாக விளக்கினார். தமது இமயமலை பயணத்திற்கும், அரசியலில் தாம் நுழைவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.


இதை தொடர்ந்து முன்பு நான் ஒவ்வொரு வருடமும் வருவேன். கடந்த 8 ஆண்டுகளாக சில காரணங்களால் இமைய மலை செல்ல முடிய வில்லை. தற்போது வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நான் இங்கு வந்துள்ளேன். இது வழக்கமான ஒன்றுதான். 


இமையமலையையும் கங்கை நதியையும் நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கு நிறைய புனிதர்கள் உள்ளனர். அவர்களிடம் ஆசி பெற்று என்னை புதுப்பித்துக் கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். எனவே, இதற்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லை. இளைய தலைமுறை கடவுள் மீதான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். 


கடவுள் மீது முழு நம்பிக்கை வைக்க அவர்களது பெற்றோரும், ஆசிரியரும் கற்றுத்தரவேண்டும். இதுவே இளைய தலைமுறைக்கு என் வேண்டுகோள் என அவர் கூறினார்.