திமுக கூட்டணியை விரும்பும் ராமதாஸ், எதிர்க்கும் அன்புமணி...! மோதல் பின்னணி இதுதான்
Ramadoss | ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Ramadoss Plan | புதுச்சேரியில் நடந்து முடிந்த பாமக பொதுக்குழு கூட்டம் காரசாரமாக நடந்து முடிந்திருக்கிறது. உட்சபட்சமாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு மேடையிலேயே வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இது பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கட்சியை விட்டு போவதென்றால் போ... என பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை பார்த்து நேரடியாக சொன்னார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற அன்புமணி, பனையூரில் புதிதாக தனியாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தன்னை சந்திக்க விரும்புவர்கள் அங்கு வரலாம் என்றும் கூறிவிட்டு பொதுக்குழுவில் இருந்து கிளம்பினார். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட இந்த பகிரங்க மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு பின் ராமதாஸ், அன்புமணி சமாதானம் அடைந்திருந்தாலும் மோதலுக்கான காரணம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரின் பகிரங்க மோதல் பின்னணியில் குடும்ப விவகாரம், கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், கூட்டணி விஷயம் என மூன்று முக்கிய காரணங்கள் அடிப்படையில் சுட்டிக்காட்டப்படுகிறது.
பாமக கட்சி முடிவுகள்
பாமக தலைவராக வந்ததில் இருந்து அன்புமணி ராமதாஸ் கட்சி சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்க தொடங்கிவிட்டார். அவரின் முடிவுகள் கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அமைதி காத்து வந்திருக்கின்றனர். இது குறித்து பாமக கட்சி நிறுவனர் ராமதாஸிடம் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். அவருன் அன்புமணி எடுக்கும் முடிவுகளில் உடன்பாடில்லாமல் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே கட்சி சார்ந்த விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் - பாமக நிறுவனர் ராமதாஸ் மோதல் தொடங்கிவிட்டது. பனிப்போர் போல புகைந்து கொண்டிருந்த நிலையில் அது அண்மையில் நடந்த பொதுக்குழுவில் வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியது.
கட்சி முடிவுகள் தான் சொல்லும்படி இருக்க வேண்டும் என விரும்பியதன் அடிப்படையிலேயே ராமதாஸ், மகன் என்றுகூட பார்க்காமல் பொதுக்குழுவில் பகிரங்கமாக அவரை கட்சியை விட்டு செல்ல வேண்டும் என்றால் செல் என கூறிவிட்டார். ஓரிரு நாட்களில் வந்த கோபம் அல்ல இது, நீண்ட நாட்களாக இருந்து வந்த கோபத்தை மொத்தமாக காட்டிவிட்டார் சீனியர் ராமதாஸ் என்கின்றனர் பாமகவினர்.
கூட்டணி முடிவுகள்
அதேபோல், அதிமுக கூட்டணியை விட்டு திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பது சீனியர் ராமதாஸ் விருப்பம். 2021 சட்டமன்ற தேர்தலின்போதே இதனை தெரிவித்திருக்கிறார். ஆனால் அன்புமணி ராமதாஸ் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. கட்சியில் இருக்கும் சீனியர்களும் 2026 சட்டமன்ற தேர்தலின்போதாவது திமுக கூட்டணிக்கு செல்லலாம் என விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். சீனியர் ராமதாஸூம் அதே முடிவில் இருக்கிறார். ஆனால், அன்புமணி அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கவே விரும்புகிறார். தோற்கும் கூட்டணி என தெரிந்தும் எதற்கு அவர்களோடு கூட்டணி செல்ல வேண்டும் என சீனியர் ராமதாஸ் உட்பட கட்சி சீனியர்கள் சொல்வதை அன்புமணி கேட்பதாக இல்லை. அதனாலேயே, பாமக பொதுக்குழுவில் புதிய முடிவுகளை எடுப்பேன், மாற்றம் தேவை, நல்ல முடிவாக, கட்சியினர் எதிர்பார்க்கும் முடிவாக இருக்கும் என சீனியர் ராமதாஸ் தெரிவித்தார். அந்த கருத்திலும் அன்புமணி ராமதாஸூக்கு உடன்பாடில்லை.
பாமகவில் அடுத்து என்ன?
இதனால் சீனியர் ராமதாஸ் உட்பட கட்சி சீனியர்கள் கடும் வருத்தத்தில் இருக்கின்றனர். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் சட்டமன்ற தேர்தலுக்கு இருப்பதால் அதற்குள் திமுக கூட்டணிக்குள் செல்ல முயற்சிக்கலாம், அன்புமணியையும் எப்படியாவது சமாதானப்படுத்திவிடலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம் சீனியர் ராமதாஸ். ஒருவேளை சீனியர் ராமதாஸ் விருப்பப்படி திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக அங்கு இருக்குமா? என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால் பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என ஏற்கனவே அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துவிட்டார். அப்படியிருக்கையில் திமுகவும் பாமக கூட்டணிக்கு சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருமா குறித்து ராமதாஸ்
இப்படியான சூழலில் தான் திருமாவளவன் என்னுடைய தம்பி என கூறியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ், அவர் மீது தனக்கு எப்போதும் மதிப்பு இருப்பதாகவும், எல்லோருடனும் இணைந்து பணியாற்றவே தனக்கு விருப்பம் என்றும் தெரிவித்திருக்கிறார். ராமதாஸின் இந்தக் கருத்து திருமாவளவனை சமாதானப்படுத்தும் வகையில் இருக்கிறது. அவரை சமாதானப்படுத்திவிட்டால் பாமக திமுக கூட்டணியில் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை. ஒருவேளை திமுக கூட்டணி தான் என பாமக முடிவெடுத்து விட்டால், இனி வரும் காலங்களில் திருமாவளவனை சமரசம் செய்ய அனைத்து முயற்சிகளையும் பாமக முன்னெடுக்கும். விரைவில் அத்தகைய மாற்றங்களை தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | பதவியை ராஜினாமா செய்யும் அன்புமணி? தைலாபுர தோட்டத்தில் பேச்சுவார்த்தை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ