Ramanathapuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: 18ஆவது மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் வேட்பாளராக களத்தில் உள்ளார். களத்திலும் இருக்கும் ஒரே ஒரு பிரதமர் வேட்பாளரும் அவர்தான். 2014, 2019 ஆகிய தேர்தல்களில் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த தேர்தலிலும் வாரணாசியிலேயே போட்டியிடுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் தேர்தல் அறிவிக்கப்படும் முன்பு சில பல பேச்சுகள் அடிபட்டன. அதில் இந்த முறை மோடி தமிழ்நாட்டில் போட்டியிட இருப்பதாகவும், அதுவும் குறிப்பாக ராமநாதபுரத்தில் தான் போட்டியிடுகிறார் எனவும் தகவல்கள் வெளியாகின. ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அவர் ராமநாதபுரத்திலும், ராமேஸ்வரத்திலும் வழிபாடு செய்தபோதும் இந்த பேச்சுகள் பலமாகின. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க இந்த பேச்சு காற்றோடு கலந்துவிட்டது. 


ராமநாதபுரத்தில் இம்முறை திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், அதிமுக நேரடியாகவும், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர். இதில் இவர் போட்டியிடுவதாலேயே இது ஸ்டார் தொகுதியாக பார்க்கப்டுகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் தொகுதி குறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.


மேலும் படிக்க | மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?


தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதியில், 35ஆவது தொகுதிதான் ராமநாதபுரம். இந்த மக்களவை தொகுதியில் மொத்தம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கும். ராமநாதபுர மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவை தொகுதிகளும் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய தொகுதிகள் இந்த ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வருகிறது.


வாக்காளர்கள் எண்ணிக்கை


ஆண் வாக்காளர்கள் - 7 லட்சத்து 97 ஆயிரத்து 12 பேர்


பெண் வாக்காளர்கள் - 8 லட்சத்து 8 ஆயிரத்து 955 பேர்


மூன்றாம் பாலின வாக்களார்கள் - 79 பேர்


மொத்த வாக்காளர்கள் - 16 லட்சத்து 6 ஆயிரத்து 46 பேர்


கடந்த 2019 மக்களவை தேர்தல் - ராமநாதபுரம் தொகுதி ஒரு பார்வை


திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 வாக்குகளை பெற்றார். கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். அமமுக சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிட்டு 1 லட்சத்து 41 ஆயிரத்து 806 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்தார் பெற்றார். 


ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்கள் விவரம்


ராமநாதபுரம் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி., நவாஸ் கனி போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரபா ஜெயபால், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிவானந்தம், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அபூபக்கர் சித்திக், புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி சார்பில் செல்வராஜ் , வீரத் தியாகி விஸ்வநாத்தாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் பாரிராஜன், பகுஜன் திராவிட் கட்சி சார்பில் மணிவாசகம் ஆகியோர் போட்டியிட்டுள்ளார். 


மொத்தம் 17 பேர் இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதில்  பாஜக கூட்டணியில் இடம்பெற்ற முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முக்கிய சுயேச்சை வேட்பாளர் ஆவார். மேலும், அதில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மட்டும் முன்னாள் முதல்வரையும் சேர்த்து 6 பேர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். எம்.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மற்றொரு சுயேச்சை வேட்பாளரும் உள்ளார்.


ராமநாதபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள்


2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் 68.19% வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 11 லட்சத்து 3 ஆயிரத்து 36 வாக்குகள் பதிவாகின. 


ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி யாருக்கு?


இந்த தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கும், சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாகும். 


மேலும் படிக்க | உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ