Lok Sabha Election 2024 Results: நாட்டில் தேர்தல் திருவிழா தன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை முடிவடைந்தது. ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று முடிவுகள் அறிவிக்கப்படும். ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26, மூன்றாம் கட்டம் மே 7, மே 13 நான்காம் கட்டம், மே 20 ஆம் தேதி ஐந்தாம் கட்டம், மே 25 ஆம் தேதி ஆறாம் கட்டம் மற்றும் ஜூன் 1 ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்தது.
ஜூன் 1 அன்று, பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) X தளத்தில் “பொதுத் தேர்தல்கள் 2024 வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள்” என்ற தலைப்புடன் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது.
வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்?
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப் பேரவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2, அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) 32 இல் 31 இடங்களில் வெற்றி பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 46 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும்.
தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு எண்ணும் நாளுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
ECI இணையதளத்தில் தேர்தல் முடிவுகளை பார்ப்பது எப்படி என இங்கே காணலாம்:
சட்டமன்றத் தொகுதி/நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்/ தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஆகியோர் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வாக்கு எண்ணிக்கையின் போக்குகள் மற்றும் முடிவுகள், ECI இணையதளமான https://results.eci.gov.in/ என்ற இணைய இணைப்பு, வாக்காளர் ஹெல்ப்லைன் மற்றும் iOS மற்றும் Android மொபைல் செயலிகள் ஆகியவற்றில் அவ்வப்போது வெளியிடப்பட்டு புதுப்பிக்கப்படும்.
தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்களுக்கான கையேடு ECI ttps://tinyurl.com/yknwsu7r மற்றும் https://tinyurl.com/mr3cjwhe ஆகிய இணையதளத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்காளர் ஹெல்ப்லைன் ஆப் (Voter Helpline App)
வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை கூகுள் பிளே அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேட்பாளர்களின் வெற்றி நிலை, முன்னணி நிலை, பின்தங்கியுள்ள வேட்பாளர்கள் மற்றும் தொகுதி வாரியான அல்லது மாநில வாரியான முடிவுகளைப் பார்க்க பயனர்கள் இவற்றில் இருக்கும் அம்சங்களைப் பயன்படுத்தலாம்.
Link to download VHA:
Android: https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en_US
iOS: https://apps.apple.com/in/app/voter-helpline/id1456535004
மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ