மழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை அக்டோபர் 16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  மேலும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் போன்றவை வழக்கம் போல இயங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - தமிழ்நாட்டு மக்களே அக்டோபர் 26 சிலிண்டர் கிடைக்காது, கொஞ்சம் உஷாரா இருங்க


மேலும் போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். இதுதவிர பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். நாளை (16.10.2024) மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.




சென்னையில் அதீத கனமழை


தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால்   சென்னையில் 24 மணி நேரத்தில் மிக கன மழை பெய்ய கூடும் எ‌ன்று‌ம் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வடசென்னைக்குட்பட்ட  திருவொற்றியூர், எண்ணூர், மணலி, புதுவண்ணாரப்பேட்டை, இராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை முதலே கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று மதியம் 12.00 மணி முதல் திருவொற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  இடியுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. 


சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீர் கால்வாய் இருந்தும் மழைநீர் மோகத்தால் மழைநீர் சாலையில் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆரம்பத்திலேயே காற்றழுத்த தாழ்வு நிலையுடன் மிரட்ட தொடங்கியுள்ளது.


மேலும் படிக்க | Red Alert என்றால் என்ன? மழை காலங்களில் இது கொடுக்கப்படுவது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ