தமிழ்நாட்டு மக்களே அக்டோபர் 26 சிலிண்டர் கிடைக்காது, கொஞ்சம் உஷாரா இருங்க

LPG cylinder News Tamilnadu : தமிழ்நாட்டில் அக்டோபர் 26 ஆம் தேதி சிலிண்டர் விநியோகம் நடைபெறாது என எல்பிஜி சிலிண்டர் விநியோக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 

LPG cylinder : குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் விநியோக ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர்.

1 /8

தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்ய்யும் ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். 

2 /8

அக்டோபர் 26 ஆம் தேதி மாநிலம் தழுவிய அனைத்து எல்பிஜி சிடிஎம்டியு தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து அந்த சங்கத்தினர் பேசும்போது, வீடுகள் மற்றும் வணிகப் பயனாளிகளுக்கு எல்பிஜி சிலிண்டர்களை வழங்கும் பணியில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

3 /8

எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விநியோகம் செய்ய ஏஜென்சிகளுக்கு ரூ.32.50 கொடுத்தாலும், எந்த ஏஜென்சிகளும் சம்பளம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

4 /8

மாநிலம் முழுவதும் உள்ள ஏஜென்சிகள் ரூ.3,000 முதல் ரூ.7,000 வரையிலான சம்பளத்தை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், அது பின்னர் ஏஜென்சிகளால் அவை திரும்பப் பெறப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

5 /8

சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ்கிறார்கள், தொழிலாளர் சட்டங்கள் நிர்ணயித்தபடி அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பது இல்லை. ஊழியர்கள் நுகர்வோரிடமிருந்து பெறும் உதவித் தொகையிலேயே வாழ்கிறார்கள். 

6 /8

சிலிண்டர்களை விநியோகிக்கும்போது சராசரியாக 20 ரூபாய் நுகர்வோரால் வழங்கப்படும். இதில், ஏஜென்சிகள் எங்களிடம் இருந்து 10 ரூபாயை பெற்றுக்கொள்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

7 /8

மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் அக்டோபர் 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் சிலிண்டர் விநியோகத்தை புறக்கணித்து ஒருநாள் போராட்டம் நடத்த உள்ளதாகவும் எல்பிஜி சிடிஎம்டியு தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

8 /8

தொழிலாளர் துறை அதிகாரிகளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதில் தலையிட்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் இந்த சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.