TN Rains Live Updates: மீண்டும் கனமழை... சென்னையை சூழ்ந்திருக்கும் கருமேகங்கள் - நிலவரம் என்ன?

Tamil Nadu Rains Live Updates: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மழை நிலவரம் குறித்த உடனடி தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

Written by - Sudharsan G | Last Updated : Oct 15, 2024, 08:48 AM IST
    Tamil Nadu Rains Live Updates: தமிழகத்தின் மழை மற்றம் வானிலை நிலவரம் குறித்த உடனடி தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
Live Blog

Tamil Nadu Rains Live Updates: சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது. தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு கனமழை பெய்தது. சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், இரவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. 

இந்நிலையில், அடுத்தடுத்து பல்வேறு இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை குறித்த உடனடி தகவல்களை இங்கு காணலாம்.  

15 October, 2024

  • 08:44 AM
    TN Rains Live Updates: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    "தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     

     

  • 08:09 AM

    TN Rains Live Updates: வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. 

  • 08:08 AM

    TN Rains Live Updates: ஏன் தக்காளி விலை உயர்வு?

    தக்காளி அதிகம் பயிரிடக் கூடிய தமிழக உள்மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக வரத்து குறைவு. சராசரியாக ஒரு நாளைக்கு 75 லாரிகளில் வந்த தக்காளி தற்போது 50 லாரிகள் மட்டுமே வருவதால் இந்த விலை ஏற்றம்

  • 08:03 AM

    TN Rains Live Updates: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

    கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. நேற்று 50 ரூபாய் - 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 80 ரூபாய் - 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.

  • 07:48 AM

    TN Rains Live Updates: எங்கு அதிக மழை?

    சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 8 சென்டிமீட்டர் என்ற அளவில் கனமழை பெய்துள்ளது. அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை, காஞ்சிபுரம் மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 7 என்ற அளவில் கனமழை பெய்துள்ளது

  • 07:38 AM

    TN Rains Live Updates: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி

    "வங்கக் கடலில் நிலைகொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. மேற்கு - வட மேற்கு திசையில் மெதுவாக நகரும், தமிழகம் ஆந்திரா நோக்கி பிற்பகலுக்கு பின் நகரும். தமிழகத்தை அடைந்து பின் ஓமன் கடற்கரையில் வலுவிழக்கும்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • 07:32 AM

    TN Rains Live Updates: உதயநிதி ட்வீட்

    நள்ளிரவு ஆய்வு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரது X தளத்தில்,"சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் சற்று நேரம் முன் ஆய்வு செய்தோம்.

    நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறிந்தோம். நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை அம்பேத்கர் சாலையில் இருந்து ஆய்வு செய்தோம்.

    மேலும், அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள், கருத்துக்களைப் பெற்றோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்" என பதிவிட்டுள்ளார். 

  • 07:29 AM

    TN Rains Live Updates: உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நாராயணபுரம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலின்போது, நாராயணபுரம் ஏரி சேதமடைந்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  • 07:06 AM

    TN Rains Live Updates: சென்னையில் ஆரஞ்சு அலர்ட்

    சென்னையில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் கனமழை பெய்ததால் தற்போது தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.  

  • 07:01 AM

    TN Rains Live Updates: சென்னையில் கனமழை தொடங்கியது

    சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவை தொடர்ந்து தற்போது மேலும் காலையிலும் கனமழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, அண்ணா மேம்பாலும், மந்தைவெளி, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. 

  • 06:58 AM

    TN Rains Live Updates: சோழிங்கநல்லூரில் பேய் மழை

    சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் மின்தடை இருந்ததாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 10 செ.மீ., மழை பெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

  • 06:52 AM

    TN Rains Live Updates: எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவையில் அரைநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • 06:47 AM

    TN Rains Live Updates: சென்னையில் மழை

    "சென்னையின் வடக்கு புறநகர் பகுதிகளில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அடுத்த 15 முதல் 30 நிமிடங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும்" என தனியார் வானிலை ஆய்வாளர் பதிவிட்டுள்ளார். 

  • 06:43 AM

    TN Rains Live Updates: கோவையில் அரைநாள் விடுமுறை

    தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று பிற்பகலுக்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது, இன்று பிற்பகல் வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியத்திற்கு பின்னரே கனமழை எச்சரிக்கை இருப்பதால் ஆட்சியர் நடவடிக்கை

  • 06:40 AM

    TN Rains Live Updates: இயல்பு நிலையில் சென்னை

    சென்னையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவு 2 மணிவரை கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் அதன்பின்னர் பெரியளவில் மழை இல்லை. தற்போது வரை மழையின்றி இயல்பான நிலை நீடிக்கிறது. இரவு முழுவதும் மழை பெய்தாலும் காலையில் பெரியளவில் எங்கும் நீர் தேங்கவில்லை. 

Trending News