சென்னை: வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டமல் காரணமாக வடகிழக்கு பருவ காற்று வீசக்கூடும் என்பதால், தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்து, அக்டோபர் 28 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான நிலைமைகள் சாதகமான நிலை உருவாகி வருவதாக சென்னை (Chennai) வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு (Tamilnadu), புதுச்சேரி, கடலோர ஆந்திரா மற்றும் கர்நாடகா மற்றும் கேரளாவின் அருகிலுள்ள பகுதிகளில் மழை பெய்யும்


அடுத்த 48 மணி நேரத்திற்கான முன்னறிவிப்பில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆங்காங்கே  பலத்த மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில், அக்டோபர் 29 ஆம் தேதி வங்க விரிகுடாவின் மத்திய கிழக்கு பகுதி  மற்றும் வடக்கு அந்தமான் கடலை ஒட்டிய பகுதிகளில், புதிதாக குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 டிகிரி செல்சியஸ் மற்றும் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில்  நேற்று, தஞ்சாவூரில் உள்ள பட்டுகோட்டையில் அதிகபட்சமாக 5 செ.மீ அதிக மழை பெய்தது, அதைத் தொடர்ந்து உசிலம்பட்டியில் 4 செ.மீ. மழையும், ஒரத்தநாட்டில் 3 செ.மீ மழையும் பெய்தது.


மேலும் படிக்க | OBC மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீடு கிடையாது: உச்ச நீதிமன்றம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR